🙋♂
இருமல், இருமல்னு டாக்டரிடம் போனியே, டாக்டர் என்ன சொன்னார்?
இது இருமல் தான்னு அவரும் ஒப்புக்கிட்டார்.
*━━━━▣━━━◤◢━━━▣━━━━━*
🙋♂
டாக்டர் இந்த நர்ஸை மாத்திடுங்க..
ஏங்க அப்படி சொல்றீங்க?
ஆபத்தான பேஷண்ட், இவரை நல்லா கவனின்னு சொல்லிட்டு போனங்க.
இந்தம்மா விடிய விடிய என் பக்கத்துல உட்கார்ந்து உத்துப் பார்த்துட்டே இருக்கு. எனக்கு பயமா இருக்கு....
*━━━━▣━━━◤◢━━━▣━━━━━*
🙋♂
வேலைவாய்ப்பு அதிகாரி: நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"
கல்லூரி மாணவர் : அப்பாவுக்குப் பதிவை புதுப்பிக்கணும் ! எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!" அதான் !
*━━━━▣━━━◤◢━━━▣━━━━━*
🙋♂
மன்னா ! அண்டை நாட்டரசன் குதிரையில் வந்து
நம் அரசியை கடத்திச் சென்று விட்டான்...!
ராணி சத்தம் போடவில்லையா?
"சீக்கிரம்..சீக்கிரம்.." என்று அலறினார்கள், மன்னா..!
*━━━━▣━━━◤◢━━━▣━━━━━*
🙋♂
கட்டுன பொண்டாட்டியை கை நீட்டி அடிக்கிறியே
நீயெல்லாம் ஒரு மனுஷனா?
கயிறால கட்டாம விட்டிருந்தா, அவ என்னை அடிச்சிருப்பா.
*━━━━▣━━━◤◢━━━▣━━━━━*
🙋♂
சர்தார் சேமிப்பு கணக்கு துவங்க ஒரு பேங்கிற்கு போனார். அவரிடம்
ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது..
விறு விறுவென்று மேனேஜரிடம் போனார்....
நான் இந்த பேங்கல தானே அக்கவுண்ட் ஆரம்பிக்கப் போறேன் பின்ன எதுக்கு
நான் டெல்லி போவனும்.... என்று அந்த விண்ணப்பத்தில் சுட்டி காட்டி னார்.
சுட்டிய இடத்தில் FILL UP IN CAPITAL என்று இருந்தது.
*━━━━▣━━━◤◢━━━▣━━━━━*
சர்தாரும் அவர் நண்பரும்
சர்தார் : ராத்திரி ட்ரெயின்ல தூக்கமே இல்ல பா...
நண்பர் : ஏன் ?
சர்தார் : ஊ(அ)ப்பர் பெர்த்
நண்பர் : கீழ் இருக்கும் பெர்த் காரங்கள மாத்தி கேட்டிருக்கலாமே...
சர்தார் : ஒயே...அதான் யாருமே இல்லியேபா
*━━━━▣━━━◤◢━━━▣━━━━━*
🙋♂
எமன் : அங்கே என்ன சத்தம்... சித்திரகுப்தா ..?
சித்திரகுப்தன் : புதிதாக எமலோகம் வந்திருக்கும் மானிடர்களை இங்கே ஏற்கனவே இருப்பவர்கள் "ராகிங்" (வதை) செய்கிறார்கள் பிரபு..!!!
*━━━━▣━━━◤◢━━━▣━━━━━*
🙋♂
டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"
நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"
*━━━━▣━━━◤◢━━━▣━━━━━*
.. 😂 ... "இந்தக் கல்யாணத்துல புதுமையா டிஜிட்டல் பந்தியாமே?" ...
... "மொய் எழுதுனதும் உங்க மொபைல் நம்பருக்கு OTP அனுப்புவாங்க. அந்த நம்பரைச் சொன்னாதான் சாப்பாடாம்!" ...
Now Online
ஒரே பக்கத்தில் இது வரை நீங்க படித்திராத 10 ஜோக்ஸ்
KALVICHUDAR WEBSITES MENU | |
---|---|
KALVICHUDAR | |
KALVICHUDAR STUDY MATERIALS | |
KALVICHUDAR VIDEOS | |
KALVICHUDAR KAVITHAIGAL | |
SEITHICHUDAR | |
COMEDY GALATTAA | |
கல்விச்சுடர் இனி உலகம் உங்கள் கையில் |