Now Online

Tom & Jerry Jokes

#01

மனைவி:- எங்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன

அழகான முகமா!!!

அன்பான மனமா!!!

பணிவான குணமா!!!


கணவன்: உன்னோட இந்த காமெடிதான்டி.


#02

கணவன்: நீ கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணி இருக்கியா….?


மனைவி: [அமைதி]


கணவன்: சாரி டியர், ஹர்ட் பண்ணிட்டேனா….?


மனைவி: என்னங்க, எண்ணிட்டு இருக்கும் போது குறுக்க பேசாதீங்க…. இப்ப பாருங்க திரும்ப எண்ணனும்…..


#03

கணவன்: கட்டின புடவையோட உன்னை வரச்சொன்னா இது என்னா சூட்கேஸ் நிறைய இத்தனை புடவைங்களா இருக்கு?


மனைவி: இதெல்லாம் ஏற்கனவே கட்டின புடவைங்க தான் டார்லிங்


#04

மனைவி குரல் ஒசந்த

ஒடனே 

கதவு ஜன்னல்

எல்லாத்தையும்

சாத்தறவன் மனுஷன்


டி வீ வால்யூமை

கூட்டுறவன் பெரிய மனுஷன்


சட்டையை எடுத்துக்

போட்டுக்கிட்டு

வெளிநடப்புச் செய்யறவன்

ஞானி


நைஸ்ப்பண்ணி

மனைவியையும்

கூட்டிக்கிட்டு வெளியில

போறவன் விஞ்ஞானி 


#05

கடவுளை பார்த்து மனிதன் கேட்டான்….!


பொண்ணுங்க எல்லாம்

நல்லா இருக்காங்க….ஆனா

பெண்டாட்டிகள்

மட்டும் ஏன்

இப்படி கொடுமைப்படுத்துறாங்க?


கடவுள் சொன்னார்

நான் பொண்ணுங்களை மட்டும் தான்

படைத்தேன்

அவங்களைக் கட்டிக்கிட்டுப்

பொண்டாட்டியா ஆக்கிட்டது

நீங்க தான்”


#06

மனைவி: ஏங்க உங்களுக்கெல்லாம்

நாகரிகமே தெரியாதா….பல மணி

நேரமா பேசறேன் கொட்டாவி

விட்டுக்கிட்டு இருக்கீங்க….


கணவன் : லூசாடி நீ இன்னும் கொட்டாவி

விடல உன்கிட்ட ஏதாவது

சொல்லனும்னு வாய

தொறந்தா, எங்க நீ பேச விடுற.


#07

மனைவி: “டியர்…..நீங்க என்னை எவ்வளவு காதலிக்கறீங்கன்னுசொல்ல முடியுமா?” 


கணவன்  “ஆஹா என்னோட டீப் லப் 72% டீ என் செல்லம்”


மனைவி: “போங்க டார்லிங் நீங்க மோசம் அப்ப அந்த 28% எவளுக்காம்?”


கணவன்:  “அடி..கிறுக்கி அழகுப் பொருட்களுக்கு 28% ஜி.எஸ்.டி கவர்மெண்டுல புடிச்சிக்குவாண்டி……”


#08

மனைவி: நீங்க ரொம்ப மோசம் கல்யாணத்துக்கு முன்னாடி பார்க், பீச், ஹோட்டல், சினிமா இப்படில்லாம் எங்கெங்கே அழைச்சிட்டு போனீங்க. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டு போறதில்லே


கணவன்: அடி அசட்டு பொண்டாட்டியே, தேர்தல் முடிஞ்சதுக்கப்புறம் எவனாவது பிரசாரத்துக்கு போவானா???  நீவேற!!!


#09

மனைவி: ஏன் இப்படி குடிச்சுக் குடிச்சுக் காசை வேஸ்ட்டாக்கறீங்க?


கணவன்: நீ மட்டும் ப்யூட்டிப் பார்லர் போய் பணத்த வேஸ்ட்டாக்கலியா


மனைவி: நான் உங்க கண்ணுக்கு அழகாத் தெரியணும்னு நானே என்னை அழகுப்படுத்திக்கிறேன்!


கணவன்: நான் மட்டும் என்ன நீ என் கண்ணுக்கு அழகாத் தெரியணும்னு தான் குடிக்கிறேன்!


#10

ஒரு கிலோ முளைக்கீரையில் 70 கிலோ வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் 'ஏ' உள்ளது. ஒரு கிலோ அகத்திக்கிரையில் 103 கிலோ ஆப்பிளில் உள்ள கால்சியம் சத்து உள்ளது


ஒரே ஒரு மனைவிக்குள்…

30 டீச்சரும், 

60 ஹெட்மாஸ்ட்டரும், 

90 ஜட்ஜீம் 

கூடவே 20 ஜெனிலியாக்களும், 

40 சந்திரமுகிகளும் 

இருக்கிறார்கள்

KALVICHUDAR
WEBSITES MENU
KALVICHUDAR
KALVICHUDAR STUDY MATERIALS
KALVICHUDAR VIDEOS
KALVICHUDAR KAVITHAIGAL
SEITHICHUDAR
COMEDY GALATTAA
கல்விச்சுடர்
இனி உலகம் உங்கள் கையில்